உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடகள போட்டியில் சிறப்பிடம்; பள்ளப்பட்டி பள்ளி அசத்தல்

தடகள போட்டியில் சிறப்பிடம்; பள்ளப்பட்டி பள்ளி அசத்தல்

அரவக்குறிச்சி, குறுவட்ட அளவிலான தடகள போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றனர்.அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவியருக்கான தடகள போட்டிகள், டி.என்.பி.எல்., புகழூர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இளையோருக்கான, 100 மீட்டர் ஓட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவி யாசினி பிரியா முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார்.மூத்தோருக்கான, 200 மீட்டர் ஓட்டத்தில் பிளஸ் 1 மாணவி கஸ்துாரி மூன்றாம் இடம், 800 மீட்டர் ஓட்டத்தில், 10ம் வகுப்பு மாணவி அஸ்விதா இரண்டாம் இடம்,1,500 மீட்டர் ஓட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி இரண்டாம் இடம் பெற்றார். மற்றும் பல்வேறு குறுவட்ட அளவிலான தடகள போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றனர். தடகள போட்டிகளில், இப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்று அசத்தினர். குண்டு எறிதல் போட்டியில் பிளஸ் 1 மாணவி ரேணுகா மூன்றாம் இடம், வட்டு எறிதல் போட்டியில் முதலிடம், ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று, 11 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் இப்பள்ளி மாணவியர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர். 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி