அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு
கரூர்: 'அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்-டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதி-யற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த விண்ணப்-பிக்கலாம். இதற்கு வழங்கப்பட்ட காலத்தை, 2026 ஜூன், 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், www.tcponline.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.