பஞ்., பதவி காலம் நிறைவு தலைவர்களுக்கு பிரியா விடை
கரூர்: கரூர் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்துகளின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று பஞ்., தலைவர்-களுக்கு பிரியா விடை கொடுத்தனர்.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக-ளுடன், கிராம பஞ்சாயத்துகளை இணைத்து விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. 28 மாவட்டங்களில் கிராம பஞ்-சாயத்துகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. பதவி காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவ-லர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில் கரூர் மாவட்டத்தில், 157 பஞ்சாயத்துகளுக்கும், 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. இவர்கள், 2020 ஜன., 5ல் பஞ்., தலைவராக பதவியேற்று கொண்டனர். அவர்களின் பதவி காலம், இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், நேற்று, அவர்க-ளுக்கு கடைசி வேலை நாளாக அமைந்தது. தொடர்ந்து, பல்-வேறு பஞ்.,களில் தலைவர்களுக்கு மக்கள் மற்றும் பணியா-ளர்கள் பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு நடந்தது.இதன்படி, கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காதப்பாறை பஞ்சாயத்து அலுவலகத்தில், பஞ்., தலைவர் கிருபாவதி தலை-மையில் விழா நடந்தது. அதில் பஞ்சாயத்தில் பணிபுரிந்த, 29 பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்-கினார். நிகழ்ச்சியில், பஞ்., துணைத் தலைவர் சிவகாமி, பஞ்., வார்டு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஏ.கார்த்திக், என்.கார்த்திக், அண்ணாமணி, சம்பூர்ணம், மலர்விழி, மலர்கொடி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.