உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை, நங்கவரம் மற்றும் தோகைமலை வருவாய் கிரா-மங்களில் சம்பா நெல் சாகுபடி முடிந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அறுவடைக்கு முன்பு, அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறந்தால், விவசாயிகள் நெல் புரோக்கர்களிடம் சிக்காமல், நேரடி கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும். காலதாமதமாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதால், குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி, நேரடி கொள்முதல் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி