உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி தலைமைவகித்தார். விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:ஞானவே-ல்(கிருஷ்ணராயபுரம்): மகிழ்பட்டி ரோடு மங்கம்மா சாலையில் பிள்ளையார் கோவில் மேல்புறம் கல்பாலத்தை புதிய பாலமாக மாற்றி தர வேண்டும்.குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர்: வரும் நிதியாண்டில் இப்பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்பிரமணி(மாயனுார்): கட்டளைப் பகுதியில் அமராவதி கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.நீர்வள ஆதாரத்துறை அலுவலர்: சிறப்பு துார் வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் பணிகள் செய்து கொடுக்கப்படும்.சந்திரசேகர் (மொஞ்சனுார்): க.பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பழ கன்றுகள் வழங்க வேண்டும்.தோட்டக்கலை உதவி இயக்குனர்: மானிய விலையில் தேவையான பழ செடிகளை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு பேசினர்.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 99 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் ரவிசந்திரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ