உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை

பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை

கரூர்: 'கரூர் அருகே, பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்த கூடாது' என, விவசாயிகள் நேற்று நீர்வளத்துறை உதவி பொறியா-ளரிடம் கோரிக்கை வைத்தனர்.கரூர் மாவட்டம், காவிரியாற்றின் கிளை வாய்க்காலான, புகழூர் பாசன வாய்க்காலில், 5.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பராம-ரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், ஏழு நாட்களுக்கு தண்-ணீரை தடுத்து நிறுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ள, நீர்வளத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதையறிந்த, புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள், நேற்று, கரூரில் உள்ள நீர்வளத்துறை உதவி பொறியாளர் சதீசை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வாய்க்காலில் தண்-ணீரை நிறுத்த வேண்டாம், வழக்கம் போல் ஏப்., 30ல் தண்ணீர் நிறுத்தப்படும் போது, பராமரிப்பு பணி மேற்கொள்ள கோரிக்கை வைத்தனர்.அதைகேட்ட உதவி பொறியாளர் சதீஷ், ''குறிப்பிட்ட ஏழு நாட்களுக்குள் பணியை முடித்து விட்டு, வழக்கம் போல் வாய்க்-காலில் தண்ணீர் திறந்து விடப்படும்,'' என, தெரிவித்தார்.அதை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால், உங்களின் (விவ-சாயிகள்) கோரிக்கைகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, அதற்-குரிய நட வடிக்கை எடுக்கப்படும் என, உதவி பொறியாளர் சதீஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை