மேலும் செய்திகள்
தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு
30-Oct-2024
கரூர்: கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தில் தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், தீ விபத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது, முதலுதவி சிகிச்சை, காற்றின் வேகத்தால் தீயை பரவாமல் தடுக்கும் முறை, வெள்ள பாதிப்புகளில் சிக்கிய பொது மக்களை பாதுகாப்புடன் மீட்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல் முறை விளக்கம் செய்து காட்டினர்.வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
30-Oct-2024