மேலும் செய்திகள்
மீன்கள் விற்பனை மும்முரம்
21-Oct-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று வலையில் சிக்கிய மீன்களை சேக-ரித்து, காவிரி கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். புரட்டாசிக்கு பின், கடந்த வாரத்தில் இருந்து மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள், அதி-காலை முதலே வந்து காத்திருந்து, போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
21-Oct-2025