மேலும் செய்திகள்
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை ஜோர்
07-Jul-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது. தற்போது, அதிகப்படியான காவிரி நீர் கதவ-ணைக்கு வருவதால், புதிய மீன்கள் வரத்து அதி-கரித்துள்ளது. இதில் ஜிலேபி மீன்கள் வரத்து அதிகம் உள்ளது. உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு காவிரி கரையோரம் வைத்து விற்பனை செய்து வரு-கின்றனர். ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய்; கெண்டை, 100 ரூபாய், பாறை, 120 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. நேற்று மட்டும், 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்-பட்டன.
07-Jul-2025