தி.மு.க., முன்னாள் நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
கரூர் கரூர் அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் முன்னிலையில், தி.மு.க., முன்னாள் நகர மாணவரணி துணை அமைப்பாளராக இருந்த மணிகண்டன், அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். கரூர் மாநகர கிழக்கு பகுதி செயலர் சுரேஷ், 18 வது வார்டு செயலர் தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.