உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கரூர்: கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, கரூரில் இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்துகிறது. இம்முகாமில் புற்றுநோய், எலும்பு -மூட்டு, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம் போன்றவற்றிக்கு இலவச ஆலோசனை அளிக்கப்படும்.மேலும் எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மருத்துவரின் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும். நாளை ( 29-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று, கரூர் கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மன்றத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது.மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுவோர் (அல்லது) பரிந்துரைக்கப்பட்டவர்கள், மூட்டு வலி, இடுப்பு வலி, மார்பகத்தில் கட்டி, மார்பகத்தில் வலி, நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, அதிகமான ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் (மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு), மலத்தில் ரத்தம், பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது வலி, கல்லீரல் அண்ட் கணைய புற்றுநோய், அடிவயிற்றில் கட்டி, குரலில் திடீர் மாற்றம், திடீர் எடை குறைவு, ஆறாதவாய்ப்புண், கழுத்தில் வீக்கம்/கட்டி போன்ற பிரச்னை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும் முகாமில் கலந்து கொள்வோருக்கு, பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். முகாமிற்கு வரும்போது, பழைய மருத்துவ பதிவுகளையும் எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் மருந்து சீட்டுகளையும் எடுத்து வர வேண்டும்.மேலும் விபரம் பெற, 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை