உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பும் பணி துவக்கம்

அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பும் பணி துவக்கம்

கரூர், கரூரில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த நாளே மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2025--26ம் கல்வியாண்டுக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடோனில் இருந்து, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 130 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப் படிக்கும், மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி துவங்கியது. அந்தந்த பள்ளிகளுக்கு லாரி, வேன்கள் மூலம் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ