உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

குளித்தலை: குளித்தலையில், நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டி.எஸ்.பி.,செந்தில்குமார் தலைமை வகித்து, ஆலோசனை வழங்-கினார். சிலை வைக்கும் முக்கிய நபர்கள், இந்து முன்னணி, பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி சிறப்பாகவும், அமைதியாகவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும். சதுர்த்தி விழாவில் சிலை வைக்கும் அனை-வரும், செப்.,8க்குள் சிலையை கரைக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.இன்ஸ்பெக்டர்கள் குளித்தலை உதயகுமார், தோகைமலை ஜெய-ராமன், மாயனுார் முருகேசன், எஸ்..க்கள் ரத்தினகிரி, பாலசுப்பிர-மணி மற்றும் போலீசார் ஆலோசனை வழங்கினர். கடந்த ஆண்டு, 184 சிலைகள் வைக்கப்பட்டது. நடப்பாண்டு புதியதாக சிலைகள் வைப்பதற்கு பொது மக்கள், அமைப்பினர் மனுக்கள் கொடுத்தனர். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.* வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும், சிலைகளை வைக்க வேண்டும், மின் இணைப்புக்கு முறையான அனுமதி பெற வேண்டும், 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு நிப ந்த-னைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தெரிவித்தார்.கூட்டத்தில், இந்து முன்னணி நிர்வாகிகள், சிலை அமைப்பு குழுவினர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை