உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் கஞ்சா கும்பல் அட்டகாசம் அதிகரிப்பு

கரூரில் கஞ்சா கும்பல் அட்டகாசம் அதிகரிப்பு

கரூர்:கரூரில், கஞ்சா பயன்படுத்தும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. அவ்வப்போது, ஒரு சில கஞ்சா வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், கரூர் ஆசாத் பூங்கா பகுதி, மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில், கஞ்சா பயன்படுத்தும் போதை ஆசாமிகள், இரவு நேரத்தில் தங்குகின்றனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த பகுதி போதை ஆசாமிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக உள்ளது. எனவே, கரூர் டவுன் போலீசார், சம்பந்தப்பட்ட இடங்களை, கண்காணிக்க வேண்டியது அவசியம் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை