உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையில் குப்பை தேக்கத்தால் அவஸ்தை

நெடுஞ்சாலையில் குப்பை தேக்கத்தால் அவஸ்தை

நெடுஞ்சாலையில் குப்பைதேக்கத்தால் அவஸ்தைகிருஷ்ணராயபுரம், அக். 25-சிந்தலவாடி நெடுஞ்சாலை அருகில், குப்பை கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய சிந்தலவாடி நெடுஞ்சாலை பிலாறு வாய்க்கால் அருகில், சாலையோர இடங்களில் பஞ்சாயத்து பகுதியில் இருந்து சேகரித்து வரும் குப்பை கொட்டப்படுகிறது. திறந்த வெளியில் இருக்கும் குப்பை, காற்றில் பறந்து சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையில் குப்பை கொட்டாமல் இருக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை