சிந்தலவாடி நெடுஞ்சாலையில் குப்பை அகற்றும் பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி பழைய நெடுஞ்சாலையோரம், கொட்டப்பட்ட கழிவு குப்பைகளை அகற்றும் பணியில் பஞ்சாயத்து நிர்வாகம் ஈடுபட்டது.கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை லாலாப்பேட்டை மேம்பாலம் பிரிவு சாலை அருகில் சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை இடம் உள்ளது. இந்த பகுதியில் பஞ்சாயத்து வார்டுகளில் இருந்து சேகரித்து கொண்டு வரப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது அதிகமான குப்பை, கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தேங்கிய கழிவு குப்பைகளை அகற்றும் பணி நேற்று காலை நடந்தது. இப்பணிகளை, சுகாதார மேற்பார்வையாளர் குழு பார்வையிட்டு, குப்பை அகற்றப்பட்டு துாய்மை பணிகள் துரிதமாக நடந்தன.