உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர், காஸ் (எரிவாயு) நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும், 30ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்களுடன் குறைதீர் கூட்டம் வரும், 30 மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை-களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும். ஆயில் நிறுவனங்களின் விதிமு-றைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ