மேலும் செய்திகள்
அதிக மாணவர் சேர்க்கை 8 பள்ளிகளுக்கு பாராட்டு
12-Oct-2025
கரூர்: கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்-ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.அதில், 6, 7, 8ம் வகுப்புகளில் அதிகளவில் மாணவியரை சேர்க்க வேண்டும். பள்ளி செல்லாத மாணவியரை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க வேண்டும், கூடுதல் கட்டடம், கழிப்பறை வச-திகளை செய்து தருவது, தொலைவில் இருக்கும் மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, வேன் ஒன்றை புரவலர்கள் மூலம் பெறு-வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பள்ளி தலைமையாசிரியை அமலா டெய்சி, உதவி தலைமை ஆசிரியை மஞ்சுளா, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
12-Oct-2025