உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

கரூர்: கரூர் மாவட்டம், ராஜபுரத்தில், க.பரமத்தி வட்டாரத்தில் கால்ந-டைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து, 'அட்மா' திட்டத்தின் கீழ் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்பு முறை பயிற்சி முகாம் நடந்தது. இதில், எலவனுார் கால்நடை டாக்டர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். செம்மறி மற்றும் வெள்ளா-டுகள் வளர்ப்பு முறை, தொழில்நுட்பங்கள் பற்றி, 30 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.கால்நடை டாக்டர்கள் தமிழரசன், கலைவாணி பயிற்சியளித்தனர். ஆடுகளுக்கு தீவன மேலாண்மை, பட்டி அமைத்து பராமரிப்பு முறைகள், ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகளின் சந்தேக கேள்விகளுக்கு விரிவாக கூறி, ஆடு வளர்ப்பு பற்றிய கையேடு வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை