உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரிடம் தங்க செயின் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது

வாலிபரிடம் தங்க செயின் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது

வாலிபரிடம் தங்க செயின் பறிப்பு: 2 சிறுவர்கள் கைதுகரூர், செப். 28-வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரிடம் தங்க செயினை பறித்த, இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; இவர் கட ந்த, 26ல் டூவீலரில் வேலாயுதம்பாளையம் அருகே, நவலடி நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு டூவீலரில் பின் தொடர்ந்த, சிவகங்கை பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர் ஜீவானந்தம் அணிந்திருந்த, ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.இதுகுறித்து, ஜீவானந்தம் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, இரு சிறுவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை