உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், பயணியர் விடுதி வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதியக்குழு நிலுவையை வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட் டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், தி.மு.க., தேர்தல் அறிக்கைகளை சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !