உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

கரூர், வெள்ளியணை நுாலகத்தை, அரசு பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.கரூர் அருகே, வெள்ளியணையில் கிளை நுாலகம் உள்ளது. இதை வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் வழிகாட்டலில், ஆசிரியர் மனோகர் மாணவர்களை நுாலகத்திற்கு அழைத்து சென்றார். நுாலகர் ஷெரீப், நுாலகத்தின் நடைமுறைகள், நுால்களின் வகைகள் குறித்து விளக்கினார். மாணவர்களை நுாலகத்தில் உறுப்பினராகி பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ