பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
கரூர், கரூர் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி பஞ்., அலுவலக வளாகத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II, துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.