மேலும் செய்திகள்
மே1ல் கிராம சபை கூட்டம்
25-Apr-2025
கரூர்:கரூர் மாவட்டத்தில், மே, 1ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது.கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 கிராம பஞ்சாயத்துகளில் மே, 1 தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், பஞ்., பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் ஆகியவை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
25-Apr-2025