உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்பு

கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்பு

கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்புகுளித்தலை, டிச. 11-குளித்தலை அடுத்த, அரவணை பஞ்., வீரமலை பாளையத்தில் கார்த்திகேயன், 42, என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீரணம்பட்டி சமூக ஆர்வலர் நாகராஜன் தலைமையில் கிராம மக்கள், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய ஒரு ஹிட்டாச்சி வாகனம், இரு டிப்பர் லாரியை பிடித்து கலெக்டர், சப்- கலெக்டர், கடவூர் தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர், அரவணை வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, டிப்பர் லாரியில் மூன்று யூனிட் கிராவல் மண் கடத்திய வீரராக்கியம் டிரைவர் வடிவேல், 34, நில உரிமையாளர் கார்த்திகேயன், 42, ஹிட்டாச்சி வாகன டிரைவர் மேல மாணிக்கபுரம் மணிவேல், 57, ஆகியோர் மீது சிந்தாமணி பட்டி போலீசார் வழக்கு பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர். மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ