உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.34 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதி-களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்-களை விற்ப--னைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியா-பாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர். விவசா-யிகள், 98 மூட்-டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.29 ரூபாய், அதிகபட்ச-மாக, 77.89 ரூபாய், சராசரியாக, 76.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,341 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 152 ரூபாய்க்கு விற்ப-னையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ