உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபைல் போன் பறித்த வாலிபர் மீது குண்டாஸ்

மொபைல் போன் பறித்த வாலிபர் மீது குண்டாஸ்

கரூர்: க.பரமத்தி அருகே, வட மாநில தொழிலாளியிடம், மொபைல் போன் பறித்த வாலிபர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்குமார், 22; இவர், கரூர் அருகே க.பரமத்தியில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் டிச., 10ல் அமர்குமார், வானவிழி பிரிவு அருகே சென்ற போது, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கார்த்திக், 24, என்பவர் மொபைல் போனை பறித்து கொண்டு ஓடி விட்டார். பிறகு, க.பரமத்தி போலீசார் கார்த்திக்கை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். இதனால், திருச்சி மத்திய சிறையில் உள்ள, கார்த்திக்கிடம் குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதற்கான நகலை, க.பரமத்தி போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை