மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்
09-Apr-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலப்பட்டி, சேங்கல், எழுதியாம்பட்டி, வீரராக்கியம், கட்டளை, ஆர்.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் செங்கல் தயாரிப்பு சூளைகள் உள்ளன. தரமான செங்கல் உற்பத்தி செய்து, கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால், செங்கல் உற்பத்தி பணிகள் துரிதமாக நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், செங்கற்களை உலர்த்தப்படும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், செங்கல் உற்பத்தி பணிகள் பாதியாக குறையும் என தொழிலாளர்கள் கூறினர். தற்போது ஒரு செங்கல், 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
09-Apr-2025