கரூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு
கரூர், கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில், ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மனோகரா கார்னர் பகுதியில் நேற்று நடந்தது.கரூர் நகரை சுற்றி ஈரோடு, கோவை சாலை, சேலம், திருச்சி மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. ஏராளமான வாகனங்கள் இப்பகுதியில் செல்வதால், நாள்தோறும் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, ெஹல்மெட் அணியாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதையடுத்து, டூவீலர்களில் செல்பவர்கள் ெஹல்மெட் அணிவதன் அவசியம், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மை குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, கரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கரூர் மனோகரா கார்னர் பகுதியில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, பொதுமக்களிடம் சாலை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து, நேற்று காலை மனோகரா கார்னர் பகுதியில், விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போக்குவரத்து போலீசார் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அங்கு, பொதுமக்களை அழைத்து சென்று காட்டி, போக்குவரத்து போலீசார் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கள் துரை கண்ணு, அர்ஜூன், ஏட்டு தேவராஜ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். பிறகு பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.