உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோட்ச தீபம் ஏற்ற வந்த ஹிந்து முன்னணியினர் கைது

மோட்ச தீபம் ஏற்ற வந்த ஹிந்து முன்னணியினர் கைது

கரூர்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி, தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திர-னுக்கு, கரூரில் மோட்ச தீபம் ஏற்ற முயன்ற, ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்-தனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என, உயர்நீதி-மன்ற கிளை உத்தரவிட்டும், அதை நிறைவேற்-றாமல் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதனால், திருப்பரங்குன்றம் மலையில் கடந்த தீப திருநாளில் தீபம் ஏற்றவில்லை. இதனால், மனம் உடைந்து காணப்பட்ட பூர்ண சந்திரன் என்பவர் மதுரையில் கடந்த, 18ல் தீக்குளித்து உயிரிழந்தார்.இதையடுத்து, பூர்ண சந்திரன் மறைவுக்கு தமி-ழகம் முழுவதும் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்படும் என, ஹிந்து முன்னணி அறிவித்தி-ருந்தது. இந்நிலையில், கரூர் மனோகரா கார்-னரில் நேற்று மாலை, 6:00 மணிக்கு மோட்ச தீபம் ஏற்ற போலீசார் தடை விதித்தனர். மேலும், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற வந்த ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் காமேஸ்வரன் உள்பட, ஐந்து பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை