வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மர்ம நபர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீர் தொட்டியை, மர்ம நபர்கள் இடித்தபோது, திடீரென சரிந்து விழுந்ததால், அருகில் இருந்த வீடு சேதமானது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வடக்கு காந்தி கிராமம், அமர்ஜோதி கார்டன், 3வது கிராசில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தொட்டி கட்டி பல ஆண்டு-களாகி மோசமானதால், மூன்றாண்டுகளுக்கு முன் தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர் தொட்டியை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அங்-குள்ளவர்கள், மாநகராட்சி சார்பில் தான் இடிக்கும் பணி நடக்கிறது என, நினைத்துள்ளனர். ஆனால், மாநகராட்சி அனுமதியின்றி தொட்டியை சில மர்ம நபர்கள் இடித்துள்ளனர். உரிய பாதுகாப்-பின்றி தொட்டியை இடிக்கும் பணி மேற்கொண்-டதால், திடீரென தொட்டி துாண்கள் சரிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில், வீடு சேதமானது. நிலைமை மோசமானதால், தொட்-டியை இடித்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா-விடம் கேட்டபோது, ''மாநகராட்சிக்கு சொந்த-மான மேல்நிலை தொட்டியை, மர்ம நபர்கள் இடித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்-கப்படும்,'' என்றார்.
மர்ம நபர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது