உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 45,000 பயனாளிகளுக்கு வீட்டு-மனை பட்டா

மாவட்டத்தில் 45,000 பயனாளிகளுக்கு வீட்டு-மனை பட்டா

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 45,000 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது,'' என, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வேலாயுதம்பாளையம் அருகில் புகழி-மலையில், இலவச பட்டா வழங்கும் விழா நடந்-தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி புகழிமலையில் வசிக்கும், 648 பேருக்கு பட்டாக்களை வழங்கி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், 28,000 குடியிருப்பவர்க-ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ண-யிக்கப்பட்டது. ஆனால், 45,000 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கந்தம்-பாளையம், சுந்தராம்பாள் நகர், முல்லை நகர், வள்ளுவர் நகர் பகுதிகளில் 'ஜீரோ வேல்யூ' செய்-யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறாமல் உள்ளன. இந்த நிலங்களில் இரண்டு வகைகள் உண்டு. அதில், 1967 மற்றும் 1987ல் அரசின் மூலமாக பட்டா வழங்கப்பட்ட இடங்கள்; மற்றொன்று ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த-மான இடங்கள். இதில் 1967, 87ல் மைனர் இனாம் ஒழிப்பு சட்-டத்தின் மூலம் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு, உடனடியாகப் பத்திரப்பதிவு செய்வதற்கான நட-வடிக்கை எடுக்கப்படும்.மேலும், சென்னையிலேயே பலமுறை கூட்டங்-களை நடத்தி, எந்தெந்த இடங்கள் கரூர் மாவட்-டத்தில் நேரடியாக கோவில்களின் பெயரில் இருக்கின்றன, எந்தெந்த இடங்களில் ஏற்கனவே பட்டாக்கள் வழங்கப்பட்டது என்பதெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 6,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டும், இன்னும் கோவில் பெயரில் நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு. அது கோவில் ஆவணங்களிலி-ருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், வேளாண்துறை இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி