உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மாமியாரை தாக்கிய கணவர் கைது

மனைவி, மாமியாரை தாக்கிய கணவர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரியா, 33. அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 34. இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. மனைவி பிரிந்து தன் தாயார் வீட்டில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த, 20 மதியம் 3:00 மணியளவில் பிரியா தன் தாயுடன் வீட்டில் இருந்தார். அப்போது கண்ணன் வீட்டிற்கு வந்து, தகாத வார்த்தையில் பேசி மனைவி, மாமியாரை தாக்கினார். இதில் பிரியாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து பிரியா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ