வெண்ணைமலைகோவில் இட பிரச்னைக்கு கருப்பண்ண சாமியாக துணை நிற்பேன்: சீமான்
கரூர்: ''கரூர் வெண்ணைமலை கோவில் இட பிரச்னைக்கு, கருப்-பண்ண சாமியாக துணை இருப்பேன்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனை-களை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்-பாளர் சீமான், கரூர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்-கப்பட்ட, 100 க்கும் மேற் பட்டோர், நேற்று காலை வெண்ணை-மலை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.அவர்களை, தடுத்து நிறுத்தி வாகனங்களில் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, மினி பஸ்களில் கரூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்த பொதுமக்கள், சீமானை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்-டுள்ள கரூர் வெண்ணைமலை பகுதி மக்கள், அச்சப்பட தேவை-யில்லை. கரூரில் மட்டுமல்ல, இப்பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. கோவிலுக்கு மக்கள்தான் இடம் கொடுத்தனர்.கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி, ஓட்டு போட்ட பொதுமக்களுக்கு, பிரச்னை ஏற்பட்டால், மிகப்பெரிய எழுச்சி ஏற்-படும். தி.மு.க., ஆட்சியை இறக்கியே தீருவோம். கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி கையப்படுத்தப்பட்ட இடங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏர்போர்ட், சிப்காட் என்ற பெயரில் அரசு ஆக்கிரமிப்பு செய்யும் இடங்களை விட, பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ய-வில்லை. அரசு என்ன ஆண்டவன் சொன்னால் கூட, இருக்கும் இடத்தை விட்டு செல்ல மாட்டோம். கரூர் வெண்ணைமலை கோவில் இட பிரச்னைக்கு, கருப்பண்ண சாமியாக இருந்து துணை நிற்பேன். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியாக, நம்பிக்கையுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கரூர் மேற்கு மாவட்ட நா.த.க., செயலாளர் நன்மாறன் உள்-ளிட்ட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.