உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள்இயக்க பயணிகள் கோரிக்கைகரூர், நவ. 15-கரூர் பஸ் ஸ்டாண்ட பகுதியில் இருந்து, மாநகரின் உட்புற பகுதிகளுக்கு கூடுதலாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் காந்திகிராமம், பசுபதிபாளையம், வேலுசாமிபுரம், வெங்கமேடு, தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் கரூர் நகரை ஒட்டியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பணியாற்ற வந்து செல்கின்றனர். தொழிலாளர்கள் காலை, மாலை நேரங்களில் பயணிக்க டவுன் பஸ்களை பெரும்பாலும் நம்பி உள்ளனர்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து, தான்தோன்றிமலை பகுதிகளுக்குத்தான் அதிகளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளுக்கு குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன. எனவே, கரூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும். டவுன் பஸ், மினி பஸ்களில் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், மக்கள் நலன் கருதி கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கினால், தொழிலாளர்களுக்கு எளிதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ