மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில் மகாத்மா காந்திக்கு மணி மண்டபம் திறப்பு விழா மற்றும் ரத்த தான முகாம், நேற்று நடந்தது.கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலை, லாலாப்பேட்டையில் புதிதாக மகாத்மா காந்திக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு, அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்.பி., அருண்நேரு, மணி மண்டபத்தை திறந்து வைத்து, காந்தி சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரத்த தான சிறப்பு முகாம் நடந்தது. காங்., செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ., மாணிக்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, கரூர் காங்., கட்சியை சேர்ந்த பேங்க் சுப்பிரமணி, கள்ளப்பள்ளி பஞ்., தலைவர் சக்திவேல், சிந்தலவாடி பஞ்., தலைவர் வெண்ணிலா, பிள்ளபாளையம் பஞ்., தலைவர் அம்சவள்ளி, காந்தி அறக்கட்டளை ஆலோசகர் கிருஷ்ணமாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025