உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் விழுந்துள்ள மரத்தை, அகற்ற வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகி-றது. காய்கறிகள், ஆடு, கோழி ஆகியவை இங்கு விற்கப்படுகி-றது. சந்தை அருகில், பழமையான வாதன மரம் விழுந்து சாய்ந்-துள்ளது. இதன் அருகில் உள்ள வளாக கட்டடத்தில், வியாபா-ரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மரம் விழுந்து கிடப்பதால், கடைகள் வைப்பதில் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். மேலும் காய்கறிகள் வாங்குவதிலும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விழுந்துள்ள வாதன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை