உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில், விவ-சாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது கிணற்று நீர் பாசன முறையில், விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். முன்னதாக, வயல்களில் உழவு செய்யப்பட்டது. பின், உழவு வயல்கள் சமன்படுத்தப்-பட்டு, விவசாய தொழிலாளர்களை கொண்டு நெல் நாற்றுகளை நடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறுகளில் உள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை