பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
கரூர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவியருக்கு, 16 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் விடுதியில் சேர, குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய் க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவியருக்கு பொருந்தாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் வரும், 18க்குள்ளும், கல்லுாரி விடுதிகளுக்கு ஜூலை, 15க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே, ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.