உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்குபணி ஆணை வழங்கல்கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி வழங்கினார். டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை