மேலும் செய்திகள்
உடையும் குழாயால் வீணாகும் குடிநீர்
01-Apr-2025
குளித்தலை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, மணப்பாறைக்கு தமிழ்-நாடு வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணியளவில் மணப்பாறை நெடுஞ்சாலையில் கோட்டமேடு கொடிங்கால் வடிகால் வாய்க்கால் பாலம் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி உயரத்துக்கு நீர் பீறிட்டு அடித்தது. இதனால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வடிகால் வாய்க்-காலில் கலந்து வீணானது.பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த, பழைய குழாயை மாற்றிவிட்டு புதிய குழாய் இணைத்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும்.
01-Apr-2025