உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஜூடோ பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. தமிழக அரசு, பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களாக தற்காப்பு கலையான ஜூடோ பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி மாணவியர் எந்த ஒரு சூழ்நிலையையும், பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல், மாணவியர் அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் கீ செயின், துப்பட்டா, பேனா, பென்சில் ஆகியவற்றை கொண்டு ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்து கொள்ளும் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவியர், தாங்கள் கற்ற ஜூடோ பயிற்சியை செய்து காட்டினர்.பயிற்சியாளர் வித்யா மற்றும் பயிற்சி பெற்ற மாணவியரை தலைமையாசிரியர் சாகுல் அமீது பாராட்டினார். நிகழ்ச்சியில் மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு, ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கிருஷ்ணவேணி, ஜோதிமணி, மேரி பொன் ராணி, ரூபா, தஸ்லீம் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ