மேலும் செய்திகள்
. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
29-Mar-2025
குளித்தலை:குளித்தலை அடுத்த, கள்ளை கிராமத்தில் ஹிந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.கள்ளை பஞ்., மணியகவுண்டன்பட்டி, கொக்கக்கவுண்டம்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, பூவாயிபட்டி, மங்காம்பட்டி, சுக்ககாம்பட்டி, குழந்தைபட்டி ஆகிய எட்டு பட்டி ஊர் பொது மக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், கரகாட்டம் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின் கள்ளை காளியம்மன் தேரோட்டம் நடந்தது.தொடர்ந்து, அங்கு நேர்த்திக்கடனுக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்த, எருமை கிடாக்களை வெட்டி கள்ளை காளியம்மனுக்கு காவல் கொடுத்து வழிபாடு செய்தனர். நேற்று மாலை மஞ்சள் நீராடுதல், காளியம்மன் கரகம் எடுத்து விடுதல் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன், முன்னாள் பஞ்., தலைவர் கருப்பையா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
29-Mar-2025