உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூர்த்தி செய்து படிவத்தை அளிக்க கரூர் கலெக்டர் வேண்டுகோள்

பூர்த்தி செய்து படிவத்தை அளிக்க கரூர் கலெக்டர் வேண்டுகோள்

கரூர், வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் விரைவில் வழங்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் கடந்த, 4 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றது.வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை, விரைவில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைஅலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து வழங்காத, வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்பதால் வாக்காளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கி, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் விரைவில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்