மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Jul-2025
கரூர்: கரூர் நாரத கான சபாவின் ஆண்டு விழாவை-யொட்டி, ஆண்டுதோறும் ஆடியில் நாள்தோறும் மாலை இசை கச்சேரி, நாடகம், ஆன்மிக உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நடப்பாண்டு, நேற்று கார்த்திக், ஜெயராஜின் மங்-கள இசையுடன் ஆண்டுவிழா தொடங்கியது. இன்று மாலை, 6:30 மணிக்கு ஊர்மிளா சத்ய-நாராயணனின் நிர்தியாஞ்சலி பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.நாளை அபிஷேக ரகுராமின் வாய்ப்பாட்டு, வரும், 30ல் அனாமிஹா, அபூர்வாவின் வாய்ப்-பாட்டு, 31ல் டாக்டர் விஜயகோபாலின் ஜூகல்-பந்தி இசை நிகழ்ச்சி, வரும் ஆக., 1ல் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கம்ப ராமாயணம் பெரிதும் வலியுறுத்துவது அன்பின் மேன்மையா, அறத்தின் சீர்மையா என்ற தலைப்பில் பட்டி-மன்றம், 2ல் சுருக்கு பை காமெடி நாடகம், 3ல் ராஜப்பா நாடகம், 4 மற்றும் 5ல் ராமகிருஷ்ணன் சுவாமியின் நாராயணீயம் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, நாரத கான சபா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
06-Jul-2025