உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சில வரி செய்திகள்

கரூர் சில வரி செய்திகள்

கரூரில் நா.த.க.,வினர் கைதுகரூர்: கரூரில், நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வடலுாரில் பன்னாட்டு மையம் கட்டுவதை கண்டித்து, நேற்று மாலை, 3:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், வடலுார் பஸ் ஸ்டாண்ட் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.அதில் பங்கேற்க நேற்று காலை, கரூர் செங்குந்தபுரத்தில் இருந்து காரில், மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலர் நன்மாறன் தலைமையில், நிர்வாகிகள், 10 பேர் புறப்பட்டனர். அவர்களை, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.ரூ.3.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.மொத்தம், 100 மூட்டை கொப்பரை தேங்காயை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 82.80 முதல், 93.75 ரூபாய், இரண்டாம் தரம், 66.30 ரூபாய் முதல், 73.90 ரூபாய் என, மொத்தம், 3.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 10ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.கிராவல் மண் கடத்தல்டாரஸ் லாரி பறிமுதல்குளித்தலை: குளித்தலை அடுத்த, பாலவிடுதி பகுதியில் கிராவல் மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலவிடுதி எஸ்.ஐ., மனோகரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கடவூர் நெடுஞ்சாலையில் கடை வீதியில் அதிவேகமாக டிப்பர் லாரி வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். உரிய ஆவணம் இல்லாமல் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் நிறுத்தி வைத்தனர்.லாரி டிரைவர் குமார் மீது, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காப்பு கட்டு விழா‍சேந்தமங்கலம்,: சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தாண்டு பிடாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், 15வது நாள் மகா மாரியம்மன் கோவில் காப்பு கட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை