இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்
கரூர்: இன்று முதல், கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்-டுக்கு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்படும் என, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:கரூர் மாநகராட்சி, திருமாநிலையூரை ஒட்டியுள்ள கருப்பம்பா-ளையம் பஞ்.,க்குட்பட்ட, 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இன்று (6ம் தேதி) காலை 6.00 மணி முதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ் ஸ்டாண்ட் கொண்டு வரப்படவுள்ளது. அங்கிருந்து அனைத்து புறநகர் பஸ்-களும் இயக்கப்படுகிறது. கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, டவுன் பஸ் வசதி செய்யப்-பட்டுள்ளது.மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பஸ்கள், வழக்கம்போல் பழைய பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ், திருமாநிலையூர் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடையும், மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப செல்லும். மதுரை, திண்டுக்கல், பழனி (வழி:அரவக்குறிச்சி) மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள், சுக்காலியூர் ரவுண்டானாவிலிருந்து செல்லாண்டிபாளையம் வழி-யாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து, மீண்டும் அதே வழித்த-டத்தில் திரும்ப செல்லும்.திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (வழி: குஜிலியம்பாறை) மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பஸ்கள், சுங்ககேட், திருமாநி-லையூர் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பி செல்லும். புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்-பாட்டிற்கு வரும்போது, அதற்குரிய பயண கட்டணங்கள் அரசா-ணையின்படி வசூலிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.