உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை

குளித்தலை சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை

கிருஷ்ணராயபுரம்: குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து, பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், லாலாப்பேட்டையில் நடந்தது.பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மீனா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில், ''குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களில், வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் உண்மை தன்மை அறியும் வகையில், பட்டியல் சரி பார்க்கும் பணிகளில் மாநில அரசு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமான படிவம் முறையாக வழங்குகின்றனரா, படிவம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வருகிறார்களா என பூத் கமிட்டி நிர்வாகிகள் பார்வையிட வேண்டும். இதன் மூலம் வாக்காளர்களுக்கு நமது மீது நம்பிக்கை எற்படும்,'' என்றார்.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மெடிக்கல் பெருமாள், முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிதுரை மற்றும் நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ