மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை சரிவு
16-Oct-2025
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பூஜை
25-Oct-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி பகுதியில் விநாயகர், சுப்-ரமணியர், குருநாதர், மல்லாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்க-ளுடன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ல் விநாயகர் வழிபாடு, கணபதி பூஜை, நவகிரக யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.மாலை, 5:30 மணிக்கு மங்கள வாத்தியம், வாஸ்து பூஜை, முளைப்பாரி அழைத்து வருதல், முதற்கால யாக சாலை பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, இரண்டாம் கால பூஜை தொடங்கி பகவதியம்மன், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபி-ஷேகம் நடந்தது.கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் உள்-பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது.
16-Oct-2025
25-Oct-2025