உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கரூர்: கரூர்அருகே, நிதி நிறுவன ஊழியர்கொலை வழக்கில்கைதான ஒருவர் மீது, குண்டர்தடுப்பு சட்டம் பாய்ந்தது.கரூர்மாவட்டம், காந்தி கிராமம்கம்பன்தெருவை சேர்ந்த செந்தில்குமார்மகன்ஜீவா, 19. நிதி நிறுவன ஊழியர். இவர்கடந்த ஜூலை, 27ல் முன்விரோதம் காரணமாக, வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, காந்தி கிராமத்தை சேர்ந்த சசிக்குமார், மதன், பாண்டீஸ்வரன், சுதாகர், மதன்கார்த்தி, அருண்குமார்ஆகியோரை, தான்தோன்றிமலை போலீசார்கைது செய்து திருச்சி மத்திய சிறையில்அடைத்தனர். இவர்கள், ஆறு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட காந்திகிராமத்தை சேர்ந்த ஹரிபிரசாத், 21, என்பவரை குண்டாஸில் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான்அப்துல்லா பரிந்துரை செய்தார். அதன்படி, இவர் மீது குண்டர்சட்டத்தின்கீழ்கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். இதற்கான நகலை, தான்தோன்றி மலை போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிபிரசாத்திடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !